இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒன்றுபட்டு செயல்பட வருமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
52 மேலதிக வாக்குகளினால் தன்னை தெரிவு செய்ததற்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இக்கட்டான நிலையிலும் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நன்றி தெரிவித்தார்.
” நாடு இன்று எதிர்கொள்கின்ற பிரச்சனைக்கு சகலரும் ஒன்றுபட்டு செயல்பட்டாலே சாத்தியமாகும். பாராளுமன்றத்துக்குள் என்னை நீங்கள் தெரிவு செய்தாலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். மக்களின் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் நிறைவேற்றுவதே ஏற்ற வகையிலே பாராளுமன்றம் செயல்பட வேண்டும். அதற்கு உங்கள் சகல ஒத்துழைப்பும் தேவை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.