Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUPDATE : புதிய அரசியல் திருப்பங்களுடன் நாளை தேர்தல் : ரணில், டலஸ், அனுரா போட்டி

UPDATE : புதிய அரசியல் திருப்பங்களுடன் நாளை தேர்தல் : ரணில், டலஸ், அனுரா போட்டி

** போட்டியில் பின் வாங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இறுதி நேர அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் சற்று நேரத்துக்கு முன் கூடியது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்களை ஏற்கும் அரசியலமைப்பு ரீதியான அமர்வே இன்று நடந்தது.

இதன்படி, பல பேரின் பெயர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூவர் மாத்திரமே போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

பதில் ஜனாதிபதியாக செயல்படுகின்ற ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய மூவரின் பெயர்கள் நாளைய தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அரசியலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டவர் சஜித் பிரேமதாச.

இறுதி நேரத்தில் அவர் போட்டியை தவிர்த்து இருப்பதோடு, டலஸ் அழக பெருமவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாபா அபயபார்த்தனை தலைமையில் கூடிய பாராளுமன்றம் , உடனடியாக வேட்பு மனுக்களை கோரியது.

அரசியலமைப்பின்படி, புதிய ஜனாதிபதியே தேர்வு செய்வதற்கான முழுமையான அதிகாரம் பாராளுமன்ற செயலாளருக்கு இருக்கிறது.

அதாவது, இந்தத் தேர்தலின் தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகமே செயல்படுவார். நாளைய தேர்தலில் போட்டியிடுபவர்களின் பெயர்களை அவர் சபையிலே கோரினார்.

இதற்கு அமைய,ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அதனை,ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

இதே வேளை,ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார எம்.பி. வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து, அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார். அதனை, ஹரிணி அமரசூரிய எம்.பி வழிமொழிந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் நாளை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் என சபாநாயகர் அறிவித்தார்.
நாளைய தினம் காலை 10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அரசியலமைப்பு விதிகளின்படி, ரகசிய வாக்கெடுப்பே நடத்தப்படும்.225 உறுப்பினர்களும் வாக்களிக்கலாம்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமானது.
இந்தத் தேர்தலில் சபாநாயகரும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவராக இருக்கிறார்.

சாதாரணமாக பாராளுமன்ற அமர்வுகளிலே நடைபெறுகின்ற வாக்கெடுப்புகளில் சபாநாயகர் பங்கேற்பது இல்லை.

ஆனாலும், தீர்மானகரமான வாக்கெடுப்புகள் வருகின்ற பொழுது சபாநாயகர் தனது வாக்கை பயன்படுத்த முடியும். இதன்படி, சபாநாயகரும் தனது அரசியல் அமைப்பு உரிமையை நாளை பயன்படுத்துவார்.

இந்தத் தேர்தலில் தெரிவத்தாட்சி அதிகாரியாக முழுமையான அதிகாரத்தோடு செயல்படும், பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தச நாயக்க, வாக்குகளை முழுமையாக எண்ணும் பணியில் ஈடுபட்டு புதிய ஜனாதிபதியை அறிவிப்பார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments