Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUPDATE :சம்பந்தன் வீட்டில் சஜித், டலஸ் தமிழ் கூட்டமைப்புடன் சந்திப்பு : 13...

UPDATE :சம்பந்தன் வீட்டில் சஜித், டலஸ் தமிழ் கூட்டமைப்புடன் சந்திப்பு : 13 அம்சக் கோரிக்கை ஏற்பு (படம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 கோரிக்கைகளை முன் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.

இதற்கு எழுத்து மூலம் உத்தரவாதம் தரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தினார். இதற்கு உடன்பாடு தெரிவித்து அவர்கள் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கியதாக தெரிய வருகிறது.

தமிழ்த் தேசியப் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளின் விவரங்கள் வருமாறு ;

  1. கல்முனை விடயம்
  2. காணி அளப்புகள்
  3. தொல்பொருள் திணைக்களம்
  4. மகாவலி அதிகார சபை
  5. அரசியல் கைதிகள்
  6. தனியார் காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுதல்
  7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி OMP
  8. ஆளுனர்கள் மாற்றம்
  9. வனவளத் திணைக்களம்
  10. வன ஜீவராசிகள் திணைக்களம்
  11. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் ;ஐ நா மனித உரிமைகள் விசாரணை
  12. வடக்கு,கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல்
  13. அரசியல் தீர்வுக்கான உடனடிப் பேச்சுவார்த்தைகளை காலதாமதமின்றி ஆரம்பித்தல் இந்த விடயங்கள் தொடர்பில் தமிழர் நலன் சார்ந்து முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் தரப்பில் கூறப்பட்டது.
    இதற்கு சஜித் பிரேமதாச, டலஸ் அழக பெரும ஆகிய இருவரும் ஒப்புதல் வழங்கியதாக தெரிய வருகிறது.
yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments