பஸ் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 2.23 வீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆகக் குறைந்த கட்டணமான 40 ரூபாய் 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்திருக்கின்றது.
சாதாரண பஸ்கள், சொகுசு பஸ்கள், அரைச் சொகுசு பஸ்கள் – சகல பஸ்களுக்கும் இந்த விலை குறைப்பு செல்லுபடியாகும் என்று ஆணை குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகள் இருக்குமாயின் தேசிய போக்குவரத்து ஆணை குழுவுக்கு அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது