புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை பாராளுமன்றத்தில் நடைபெறும் தேர்தலில், ரவூப் ஹக்கீம், ரிசார்ட் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோர் டலஸ் அழக பெருமவை முழுமையாக ஆதரிக்க போவதாக அறிவித்துள்ளார்கள்.
வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தினார்.
இதே போல, டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற அடிப்படையில், ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்த் குமார், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.