புதிய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில், மூவர் களமிறங்கி இருக்கின்ற நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப் பெருமவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இரு தரப்பும் கடுமையான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கூடுதலாக வெற்றி வாய்ப்பு ரணில் விக்ரம சிங்க பக்கமே இருப்பதாக கள நிலவரங்களில் இருந்து தெரிய வருகிறது.
என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் உதவியுடன் டலஸ் அழகப் பெரும கடுமையான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஆளும் பொதுசன பெரமுன கட்சி இரண்டாகப் பிளவடைந்த நிலையில், டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்கும் ஒரு குழுவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் இன்னொரு குழுவுமாக செயல்படுகின்றார்கள். டலஸ் அழகப் பெருமவின் பெயரை, SLPP கட்சியின் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ் வழிமொழிந்தார்.
ஆகவே,கடுமையான இந்த போட்டிக்கு மத்தியில் வெல்லப்போவது ரணில் விக்கிரமசிங்கவா ? அல்லது டலஸ் அழகப் பெருமவா?என்பதை நாளைய பாராளுமன்றம் பதில் சொல்லும்.