Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றில் இன்று வேட்பு மனுக்கள் ஏற்பு; அவசர...

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றில் இன்று வேட்பு மனுக்கள் ஏற்பு; அவசர காலநிலை பிரகடனம்

கொழும்பிலும் பாராளுமன்றத்திலும் பல்லடுக்கு பாதுகாப்பு நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாராளுமன்றத்திலும் கொழும்பு மாநகரிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் பாராளுமன்றம் இன்று அவசர அவசரமாக கூடுகிறது. இலங்கை வரலாற்றில் பரபரப்பான ஒரு சூழ்நிலையில். இந்த அமர்வு நடைபெறுகிறது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடும் இந்த பாராளுமன்றத்தில், இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தீர்க்கமான முடிவை எட்டும் கட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ ராஜினாமா செய்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் ராஜினாமா செய்து மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

இதன்படி, கடந்த 16ஆம் தேதி கூடிய பாராளுமன்றத்தில், ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்தார்.

இந்த பெற்றிடத்தை நிரப்புவதற்கான வேட்பு மனு கோரல், இன்று 19ஆம் தேதி இடம்பெறும் என்று , பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்தார். இதற்கமைய, இன்று காலையில் 10 மணியிலிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.

பாராளுமன்றத்தினுள் ஜனாதிபதி ஒருவரை போட்டியுடன் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். அதாவது, இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வது என்பது இலங்கை பாராளுமன்றத்துக்கு புதிய அனுபவம் என்றே கொள்ளலாம்.

நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ரண சிங்க பிரேமதாச , 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.

திடீரென ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கு, அப்போதைய பிரதமரான டி.பி.விஜதுங்க தெரிவு செய்யப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு டிபி விஜய துங்க ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு எந்த வேட்பாளரும் முன் வரவில்லை ; அதே நேரம் எந்த ஒரு கட்சியும் போட்டியிடவும் தயாராகவில்லை. இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்கால ஜனாதிபதியின் தெரிவு சுமுகமாக இடம்பெற்றது.

ஆனால், இன்றைய நிலை அப்படியல்ல, கோட்டா பய ராஜபக்ஷ ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, இதுவரை நான்கு வேட்பாளர்கள் போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

இது ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், இந்த நான்கு வேட்பாளர்களும் பிரத்தியேகமாக அறிவித்துள்ளார்கள்.

பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய நால்வருமே இடைக்கால ஜனாதிபதி veற்றிடத்திற்கு போட்டி போட இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

ஆனால் இன்று வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பே எத்தனை பேர் இந்த போட்டியில் குதிக்கிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகும்.

இன்று காலை 10 மணிக்கு கூடுகின்ற பாராளுமன்றம்,வேட்பு மனுக்களை ஏற்றுக் கொண்ட பின் ஒத்திவைக்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க, நாளை 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்கும். அரசியலமைப்பு ரகசிய வாக்கெடுப்பையே வலியுறுத்துகிறது.

பாராளுமன்றத்தில் உள்ள நடைபெறும் இந்தத் தேர்தலின் தெய்வத்தாட்சி அதிகாரியாக, பாராளுமன்ற செயலாளர்கள நாயகம் தம்மிக்க தசநாயக்க செயல் படுவார். நாளை நடைபெறுகின்ற தேர்தலிலே கூடுதலான வாக்குகளை பெறுபவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்கால ஜனாதிபதியாக செயல்படுவார்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவி விலகுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார்.

ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பு மாநகரில் முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஜனாதிபதியை நாட்டை விட்டு வெளியேற்றினர்.

இப்படியான ஒரு பதட்டமான சூழ்நிலையில்தான், இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் பணிகளை பாராளுமன்றம் முன்னெடுக்கின்றது. பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க நாடு முழுவதும் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி இருக்கின்றார். இதற்கு பலத்த கண்டனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் பாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது.

பாராளுமன்றத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கொழும்பு மாநகரிலும் முப்படையினர் மற்றும் போலீசாரின் நான்கு அடுக்கு பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு சபாநாயகரும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வேட்பு மனுக்கள் இன்று ஏற்கப்படுவதோடு, நாளை 20 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்பதினமே புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட இடைக்கால ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படும்.குணா – Ceylonsri

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments