நாட்டில் நிலவி வந்த நிதி நெருக்கடி நிலைமைகளை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கம் மூடி மறைத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். சீ.என்.என். செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கி வந்த மற்றும் எதிர்நோக்கி வரும் பொருளாதார, நிதி நெருக்கடி நிலைமைகளை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.