டலஸ் அழகப் பெருமவை ஜனாதிபதி ஆக்குவதும் சஜித் பிரேமதாசாவை பிரதமர் ஆக்குவதுமே எங்களது இலக்கு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
” மக்கள் பெரும் மாற்றத்தையே விரும்புகின்றார்கள். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை. இன்றைய இந்த நிலையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய இலக்கு “என்றும் அவர் தெரிவித்தார்.
SLPP பிளவடைந்திருக்கின்ற நிலையில்,டலஸ் அழக பெருமையை உங்களால் ஜனாதிபதி ஆக்க முடியுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கட்சி பிளவடையவில்லை. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் வாக்களிப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக வழியில் ஒவ்வொரு உறுப்பினர்களும் செயல்படுவார்கள். அதற்காக கட்சி பிளவு பட்டதாக கொள்ள முடியாது ” என ஜீ. எல்.பீரிஸ் கூறினார்.