புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான போட்டியில் மூவர் களமிறங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் டளஸ் அழக பெரும, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேவிபி தலைவர் அனுர குமார திசா நாயக்க ஆகிய மூவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியில் இருந்து ஒதுங்கியுள்ளார்.