கொழும்பு,கோட்டை, டெலிகொம் தலைமையகத்துக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்,நீர் கொழும்பு தெல்வத்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் என போலீசார் அடையாளம் கண்டு உள்ளார்கள்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கமே கொலையில் முடிந்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. கொலையாளி தப்பி சென்று இருக்கின்றார். கோட்டை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.