இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்துக்கு Covid-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பற்றிய ஆகக் கடைசி தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தாமே தயாரித்து இயக்கியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் (teaser) வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்துக்கு Covid-19 தொற்று உறுதியாகியிருக்கும் தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ராவணன், ஓ காதல் கண்மணி போன்ற படங்களை இயக்கி இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம் என்றால் அது மிகையில்லை. அவர் சீக்கிரம் குணமடைய வேண்டுவதாக, சமூக வலைத்தளங்கள் மூலம் அவரது ரசிகர்கள் பிரார்த்தனைகளை முன்வைத்துள்ளனர்.