Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமேய்ப்பன் இல்லாத நிலையில் மொட்டுக்கட்சி

மேய்ப்பன் இல்லாத நிலையில் மொட்டுக்கட்சி

ஆளும் கட்சியாக இருக்கின்ற பொதுஜன பெரமுன இன்று தலைவர் இல்லாத நிலையில் ஊசல் நாடுகிறது என்று முன்னிலை சோஷலித்த கட்சியின் கல்விச்செயலாளர் புபுது யாகொட தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ பதுங்குளியில் இருக்கிறார். பஸ்ஸில் நாட்டை விட்டு தப்பி ஓடுவதற்கு விமான நிலையங்களுக்கு ஓடித் திரிகிறார்.
அதேபோல ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடி விட்டார்.

இந்த நிலையில், தலைவர்கள் இல்லாத நிலையில் மொட்டு கட்சி தத்தளித்துக் கொண்டிருக்கிறது என புபுது மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் துள்ளிக் குதிக்கிறார். பதில் ஜனாதிபதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க வை மொட்டுக் கட்சி ஆதரிக்கும் என்று அவர் அறிவித்திருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பொது ஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments