கொழும்பு காலி முகத்திடலில் போராட்டம் நடத்தி வரும் குழுவின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.



இதன் போது, போராட்டக் குழுவின் முக்கிய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

