புதிய இடைக்கால ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில்,தமிழ் கூட்டமைப்பு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
நாளை 19ஆம் தேதி முடிவெடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்திருக்கும் நிலையில், ” ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் வேட்பாளர்களை பொறுத்தே கூட்டமைப்பு முடிவெடுக்கும்” என தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்து இருக்கிறார்.
என்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய முன் நிபந்தனைகளை வேட்பாளர்களிடம் வைத்துப் பேசிய பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.