பாராளுமன்றத்தில் எதிர்வரும் இருபதாம் திகதி இடம் பெற உள்ள ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை குழு நாளை கூட உள்ளது.
குறித்த ஜனாதிபதி தேர்வுக்காக போட்டியிடும் சகல வேட்பாளர்கள் தொடர்பிலும் கலந்தாலோசித்து இறுதி முடிவு எட்டப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கான தமது விருப்பத்தை தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை குழுவின் முடிவு எவ்வாறானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேலை ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது கூட்டணியின் முடிவே தமது நிலைப்பாடு என ஏற்கனவே அறிவித்துவிட்டது.