Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஏறாவூர் இ.போ. ச ஊழியர்கள், நடத்துனர்கள்,சாரதிகள், எரிபொருள கோரி பணி பகிஷ்கரிப்பு

ஏறாவூர் இ.போ. ச ஊழியர்கள், நடத்துனர்கள்,சாரதிகள், எரிபொருள கோரி பணி பகிஷ்கரிப்பு

(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு,ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர்கள்,சாரதிகள் மற்றும் ஊழியர்கள் பெற்றோல் கோரி இன்று திங்கட்கிழமை (18) காலை 6 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு குறிக்கே பஸ்வண்டிகளை மறித்து பணி பஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குறித்த இலங்கை போக்குவரத்து சபையில் கடமையாற்றும் நடத்துனர், சாரதிகள் மற்றும் ஊழியர்கள் தமது வீடுகளில் இருந்து போக்குவரத்து சபைக்கு கடமைக்கு வருவதற்கு தங்களது மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் இல்லாததால் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக கூறியே இவர்கள், பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் வீதியை விட்டு விலகி போராட்டம் செய்யுமாறு வலியு றுத்தியதையடுத்து வீதியில் குறுக்கே நிறுத்திய பஸ்வண்டிகள் அங்கிருந்து நகர்தி போக்குவரத்து சபைக்கு ள் கொண்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து செங்கலடி, ஏறாவூர் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிசார் பணிபஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசாங்க அதிபரின் சிபார்சின் மூலம் தாளங்குடா ஜ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுதருவதாக உத்தரவாதம் தெரிவித்த போதும் பெற்றோல் தமக்கு கிடைக்கும்வரை தொடர்ந்து பணிபஸ்கரிப்பில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்து தொடர்ந்து பணிபஸகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் .

இந்த பணிப்பஸ்கரிப்பினால் மாவட்டத்துக்கான மற்றும் வெளி மாவட்டத்துக்கான ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்வண்டிகள் போக்குவரத்து சேவையும் இடம்பெறவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments