அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் இன்று அமல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று சட்டத் தரணிகள் சங்கம் கேட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.