Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅவசர காலநிலை பிரகடனம் மக்களின் குரலை நசுக்கும் முயற்சி: ஐ. ம. ச கண்டனம்

அவசர காலநிலை பிரகடனம் மக்களின் குரலை நசுக்கும் முயற்சி: ஐ. ம. ச கண்டனம்

ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் என ரஞ்சித் மத்தும பண்டார குற்றச்சாட்டு

“பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒரு தடவை நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் தயாராகி வரும் இந்நேரத்தில், நாட்டில் அவசரகாலச் சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஜனாதிபதித் தேர்தலிலும் குறிப்பிட்ட செல்வாக்குச் செலுத்தும் முயற்சியாக கருதி நாம் கண்டிக்கிறோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்ம பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று இரவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் கூறியுள்ளதாவது ;

விக்கிரமசிங்க அவர்கள் பதில் ஜனாதிபதியாக வருவதற்கும், பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கும் நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள பின்னணியில், மக்களின் குரலை நசுக்கும் முயற்சியாக அவரது அவசரநிலைப் பிரகடனத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அவசரகாலச் சட்டத்தைத் தாண்டி, சமூக ஊடகங்களில் இடம் பெறும் கருத்தாடல்கள் மற்றும் அபிப்பிராயங்களை நசுக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் விதிமுறைகள் மற்றும் குற்றச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர்களைக் கையாள பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான கூட்டங்கள், அமைதியான எதிர்ப்பு தெரிவித்தல்,கருத்து தெரிவிப்பதற்கும், நிலைப்பாடுகளை தெரிவிப்பதற்குமான கருத்துத் சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த அடிப்படை உரிமையையும் பதில் ஜனாதிபதி வேண்டுமென்றே மீறுகிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

விக்கிரமசிங்க அவர்கள் தனது அதிகாரத்தை பலப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், கடுமையான அடக்குமுறை ஆட்சிக்கான அவரது விருப்பத்தின் தெளிவான அறிகுறியாகும்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்திட்டமோ அல்லது வேலைத்திட்டமோ அவரிடம் இல்லை என்பது அவர் பிரதமராகவும்,
நிதியமைச்சராகவும் கடந்த இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளில் இருந்து தெரிகிறது.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, பிரச்சினைகளின் ஊடகப் பேச்சாளராகச் செயற்பட்டு தீர்வுகள் இன்றல்ல நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் விக்கிரமசிங்க அவர்கள், எப்படியாவது ஜனாதிபதி பதவியை பெற்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்வது நாட்டு மக்களை வெல்லவைப்பதற்கு அல்ல,மக்கள் நிராகரித்த ராஜபக்ஸவின் அரசியலை பாதுகாப்பதற்காகவே என்பது தெளிவாகிறது.

இத்தருணத்தில் மக்கள் கருத்துக்கு அடிபணிந்து மக்களை அடக்கி ஆணைகள் மூலம் அதிகாரத்தை பலப்படுத்த முயல்வதற்குப் பதிலாக பொது மக்கள் கருத்துக்கு தலைவணங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துகிறோம்.

பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சமூக ஊடகங்கள் அல்லது ஊடக செயற்பாட்டாளர்களை அடக்க வேண்டாம் என்றும் விக்கிரமசிங்க அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் கருத்துக்கு எதிராக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஜனநாயக ரீதியில் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து கையாளப்படும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு சர்வாதிகார வெறியை முறியடித்து பெற்ற வெற்றியை, இதேபோன்ற மற்றொரு தருணத்தை நாடு சந்திக்காதிருக்க அத்தருணத்தைத் தடுக்க எம்முடன் இணையுமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழைக்கிறோம்.

மக்கள் விருப்பு, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டத்தை சர்வ கட்சி செயல்முறை மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை வென்றெடுக்க, பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு நாட்டை நேசிக்கும் அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

ரஞ்சித் மத்தும பண்டார(பா.உ)
பொதுச் செயலாளர்
ஐக்கிய மக்கள் சக்தி

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments