Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரணில் ஜனாதிபதியானால் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு ருவான்

ரணில் ஜனாதிபதியானால் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு ருவான்

எதிர்வரும் 20ஆம் திகதி, பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அந்த இடத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தனவை நியமிப்பது தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூடுதல் கவனம் செலுத்திய உள்ளார் என்று தெரிய வருகிறது.

கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் அவர் நியமிக்கப்படலாம் என தெரிய வருகிறது.

அவ்வாறு ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவருக்கு சட்டம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு பதவியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தில்,ருவன் விஜேவர்தன சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராக
பதவி வகித்திருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments