Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுரணிலை ஆதரித்தால் மட்டுமே சகலரும் அரசியல் செய்யும் நிலை உருவாகும்: ஐ.தே.க தவிசாளர் வஜிர

ரணிலை ஆதரித்தால் மட்டுமே சகலரும் அரசியல் செய்யும் நிலை உருவாகும்: ஐ.தே.க தவிசாளர் வஜிர

எதிர்வரும் 20ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வது மிகவும் அவசியமாக இருக்கின்றது.

எதிர்காலத்தில் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டுமாயின்,ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது பிரிந்து,போட்டி போட்டு செயல்படும் நேரம் அல்ல. மாறாக, சகலரும் இணைந்து செயல்படும் பட்சத்தில் சர்வதேச உதவிகளை பெற்று பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர முடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாடு நெருக்கடியை நோக்கி நடந்து கொண்டிருந்ததால் நாட்டை மீட்டெடுக்க தலைவர் ஒருவர் தேவைப்பட்டார். அதனால்தான்,அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பியாக நியமித்தோம். அவர் உயர்நிலையை அடைவார் என்று நாம் அன்றே கணித்தோம்.

சிதறுண்டு,வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு ஏற்று இருக்கிறார். நாட்டை சரியாக முகாமைத்துவம் செய்து மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

ஆகவே,பாராளுமன்றத்தில் உள்ள சகலரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டில் எதிர்கால அரசியலை சகலரும் முன்னெடுக்கக்கூடிய நிலை உருவாகும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments