நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், வெளிநாடு ஒன்றில் இருந்தவாறு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அடுத்த மாதம் அளவில் நாடு திரும்ப உத்தேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜீ. எல்.பீரிஸை ஆதாரம் காட்டி வெளிவந்திருக்கும் இந்த செய்தியில், அடுத்த மாதம் அளவில் இலங்கை வர இருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கு, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி,கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றும் பாதுகாப்பும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.