Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகாலிமுகத்திடல் தன் எழுச்சி போராட்டத்திற்கு இன்று 100 வது நாள்

காலிமுகத்திடல் தன் எழுச்சி போராட்டத்திற்கு இன்று 100 வது நாள்

- உலகை திரும்பிப் பார்க்க வைக்கும் மக்கள் போராட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவை பதவி விலக கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இந்த தன் எழுச்சி போராட்டத்தின் காரணமாகவே நாடு முழுவதும் கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்தன.

மக்கள் எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் ஆக இருந்த பெசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டுச் சென்றார்.

இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார்.

முழுமையாக வெற்றியடைந்துள்ள போராட்டமாக இந்தப் போராட்டம் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. எனினும் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினூடாக புதிய இடைக்கால ஜனாதிபதி ஒருவர் தெரிவாகும் வரை இந்த போராட்டத்தை முன்னெடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர். அவரது கட்சி எந்த ஒரு மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தையும் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில்,தேசிய பட்டியல் ஊடாக கிடைத்த ஒரு உறுப்பினருக்கான வாய்ப்பையும் தானே பாராளுமன்றத்துக்கு வருவதற்கு ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

மக்கள் செல்வாக்கு இல்லாத ரணில் விக்ரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ பிரதமராக நியமித்தமை ஜனநாயக விரோத செயல்.அவ்வாறு நியமிக்கப்பட்ட பிரதமர் தற்போது பதில் ஜனாதிபதியாக இருப்பதுடன் இடைக்கால ஜனாதிபதியாக வர முயற்சிப்பதையும் போராட்டக்காரர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.

ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என அவர்கள் இப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வரலாற்றில் வெற்றிகரமான மக்கள் போராட்டம் இன்று நூறாவது நாளை கொண்டாடுகிறது.

SourceCeylonsri
yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments