Saturday, 20 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்

13 நிமிடங்களில் கூடிக் கலைந்த பாராளுமன்றம்

- புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய 19ஆம் திகதி வேட்பு மனு ஏற்பு

பாராளுமன்றத்தின் இன்றைய விசேட அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 13 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய அமர்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்தது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பாராளுமன்ற செயலாளர்கள் நாயகத்தினால் வாசிக்கப்பட்டது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேயவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்ற செயலாளர்கள் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஜனாதிபதியின் ராஜினாமா தொடர்பான கடிதத்தை வாசித்ததோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.

இதன்படி, எதிர்வரும் 19ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்தில் செயலாளர் நாயகம் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் தேதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments