Monday, 5 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாராளுமன்றம் இன்று காலை விசேடமாக கூடுகிறது: ஜனாதிபதியின் பதவி வெற்றிடம் தொடர்பில் அறிவிப்பு

பாராளுமன்றம் இன்று காலை விசேடமாக கூடுகிறது: ஜனாதிபதியின் பதவி வெற்றிடம் தொடர்பில் அறிவிப்பு

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு விசேடமாக கூடுகிறது.
இதற்கான அழைப்புகள் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் தேதி ராஜினாமா செய்த நிலையில், இன்றைய பாராளுமன்றத்தின் அமர்வு இடம் பெறுகிறது.

நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

நாட்டை விட்டு தப்பி சென்ற நிலையில், சிங்கப்பூரிலிருந்து அவரது ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இதனை நாட்டு மக்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன உத்தியோபூர்வமாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்காகவே, பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடும் போது, ஜனாதிபதி பதவி விலகியமை.அதனால் பதவி வெற்றிடம் இருக்கிறது என்பதையும் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக சபைக்கு இதனை அறிவிப்பார்.

அரசியலமைப்பின்படி,புதிய ஜனாதிபதியை பாராளுமன்றமே தெரிவு செய்ய வேண்டும். அதற்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்வதும்,தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளையும் பாராளுமன்றமே செய்ய வேண்டும்.

ஏற்கனவே எடுத்த முடிவுகளின் படி, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுக்கள் 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல,புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறும்.

அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளமைக்கு அமைய, புதிய ஜனாதிபதி, பதவி விலகிய கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய காலத்துக்கே ஜனாதிபதியாக செயல்படக் கூடிய வகையில் பாராளுமன்றத்தினால் தேர்வு செய்யப்படுவார்.

அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கான தேர்தலில், பாராளுமன்ற சபாநாயகரும் வாக்களிப்பில் கலந்து கொள்வார்.

இதில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் இந்தத் தெரிவு நடாத்தப்படுதல் வேண்டும்.

● இதற்கமைய, இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்படும் திகதியையும், நேரத்தையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஆகவே, அரசியலமைப்பின் பிரகாரமே இன்றைய பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இடம் பெறுகிறது என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டிய ஒரு விடயமாகும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments