பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுவதற்கு இருக்கின்ற நிலையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் இரண்டு பிரதான வீதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னேற்பாடாகவே இது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.