Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeவெளிநாட்டு'பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு' - பைடன் பகிரங்க குற்றச்சாட்டு

‘பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு’ – பைடன் பகிரங்க குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கு சவுதி இளவரசர்தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதிக்கு அரசு ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது சவுதியின் ஜெட்டா நகரில் சவுதி இளவரசர் சல்மான், ஜோ பைடனின் சந்திப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் பத்திரிகையாளர் சந்திப்பில் பக்கேற்றார்.

அப்போது ஜமால் கஷோகி மரணம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பைடன் அளித்த பதிலில், “ நான் இந்த விவகாரத்தை நேரடியாக விவாதம் செய்தேன். அதைப் பற்றி தெளிவாக்கிக் கொண்டேன்.

நான் அதை நேரடியாகவே கூறுகிறேன். கஷோகியின் மரணத்திற்கு இளவரசர் சல்மான் காரணம் இல்லை என்று கூறுகிறார். உண்மையில் அவர்தான் கஷோகி கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். கஷோகிக்கு நடந்தது மூர்க்கத்தனமானது. கஷோகி மரணத்திற்கு சவுதி இளவரசர் சல்மான் தான் காரணம்.

அமெரிக்க புலானாய்வு துறை செய்த விசாரணையில் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை கண்டறிந்துள்ளது. இதனை கூறுவதால் தான் வருத்தப்படவில்லை.” என்றார்.

இந்தச் சந்திப்பில் கச்சா எண்ணெய் குறித்து விவாதித்ததாக ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஜோ- பைடன் – இளவரசர் சல்மான் இடையே நடந்த இந்த சந்திப்பை ஜமால் கஷோகியின் காதலியான ஹடிஸ் சென்ஜி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஹடிஸ் சென்ஜி , ட்விட்டரில் கஷோகியின் பெயரில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், “என் கொலைக்கு நீங்கள் உறுதியளித்த பொறுப்பு இதுதானா? சவுதி அரசு குடும்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் பைடனின் கேள்வி எழுப்பியதற்கு, ”அவர் அவ்வாறு நினைத்தற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments