புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள தேர்தலில் தானும் போட்டியிடப் போவதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
தான் இந்தத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். என்றாலும் திடீரென ஜேவிபி எடுத்த முடிவால் போட்டியிடுவதற்கு தீர்மானித்து உள்ளார்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் இதுவரை நான்கு பேர் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச,பொதுசன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும , ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரம் தாங்கள் போட்டியிடுவதை உறுதிப்படுத்துகிறார்கள்