கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அந்த அறிக்கை தனக்கு கடந்த வாரம் கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.