Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுBreaking news:19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த முழுமையான நடவடிக்கை: பதில் ஜனாதிபதி அறிவிப்பு (காணொளி )

Breaking news:19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த முழுமையான நடவடிக்கை: பதில் ஜனாதிபதி அறிவிப்பு (காணொளி )

- பாராளுமன்ற ஜனநாயகத்தை அழிக்க முற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை - ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு

அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தை மீண்டும் முழுமையாக கொண்டு வரப் போவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்துக்கு முன் அறிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு காணொளி வெளியிட்டவர் இதனைக் கூறியுள்ளார்.

எட்டாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதைய டுத்து தற்காலிகமாக பதில் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட நான், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான சட்டமூலத்தை சமர்ப்பிக்க இருக்கின்றேன் என்று கூறினார்.

புதிய ஜனாதிபதி எதிர் வரும் இருபதாம் தேதி பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட இருக்கின்றார். தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியும் 19ஆவது திருத்தத்தையும் முழுமையாக அமல்படுத்தக் கூடிய வகையில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

போராட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், அமைதியான போராட்டங்களுக்கு நான் நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துழைப்பு வழங்குவேன்.

என்றாலும் சிலர் குழப்பங்களை ஏற்படுத்தும் சதி முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். அத்தகைய செயல்பாடுகளுக்கு தான் எந்த வகையிலும் உதவப் போவதில்லை என்றும் பதில் ஜனாதிபதி கூறினார்.

புதிய ஜனாதிபதி பதவி ஏற்கின்ற நாளில் பாராளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு சிலர் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயாதீனத் தன்மைக்கு அச்சுறுத்தல் விடுப்பது நாகரிக சமூகத்தின் செயலாக இருக்காது.

அதை நேரம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அழித்து பாசிச செயல்பாடுகளை கொண்டு வருவதற்கும் சிலர் முயற்சி செய்கின்றார்கள். இதற்கு எந்த வகையிலும் இடமளிக்க மாட்டேன் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments