ரஷ்ய ஏரோபிளட்( Aeroflot ) விமான நிறுவனத்துக்கு எதிராக அயர்லாந்து நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு வணிக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதன்படி, அயர்லாந்து நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்த நீதிமன்றம், வழக்குக்கான செலவுத் தொகையையும் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது.
அயர்லாந்து நிறுவனத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனால் இலங்கையில், இந்த விமானம் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கைக்கு ரஷ்யாவுக்கும் இடையில் ராஜதந்திர உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது.
என்றாலும் அரசாங்கம் இதில் தலையிட்டு சுகமான முறையில் தீர்வு காண உதவியதை அடுத்து விமானம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.