Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபோராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த பிரிகேடியர்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மறுத்த பிரிகேடியர்

கொழும்பு,கொள்ளுப்பி ட்டியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நிராகரித்த ராணுவ அதிகாரி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அந்த அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டுங்கள் கொண்டு வந்தார்கள். இதன் போது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கு ராணுவத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

என்றாலும் அந்த உத்தரவை நிராகரித்த 112 வது படையணியின் கட்டளை தளபதி ப்ரிகேடியர் அணில் சோமவீர என்பவரே பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவர்.

இவர் ராணுவ தலைமையகத்துக்கு மீள் அழைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்று சிறிது நேரத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments