Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாராளுமன்றத்தின் விசேட அமர்வு நாளை;ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமனம்- சபாநாயகர்

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு நாளை;
ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமனம்- சபாநாயகர்

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு நாளை சனிக்கிழமை இடம்பெறும்.

இன்றும் நாளையும் அமர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பொழுதிலும் ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் சிங்கப்பூரிலிருந்து கிடைக்காததால் இன்றைய அமர்வு ரத்து செய்யப்பட்டது. நாளைய அமர்வில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பிற்கமைய,பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இழுபறி நிலைக்கு மத்தியில் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று மாலை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்தார். சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாகவே குறித்த கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் மூலப் பிரதியை சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் இராஜதந்திரி ஒருவர் கொழும்புக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலேயே தற்போது பதவி விலகல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments