Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா: உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர் (காணொளி)

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா: உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர் (காணொளி)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை ஜூலை 14ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன, அதுவரையில் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

விடேச ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே, அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments