இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சஷவுக்கு மாலைதீவு அரசாங்கம் எவ்வாறு வசதிகளை வழங்கியது என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாலைத்தீவு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. மாலைதீவு தேசிய கட்சி இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
மாலைதீவு தேசிய கட்சியின் இந்த நடவடிக்கை மிகவும் நல்லதொரு நடவடிக்கை என மாலைதீவு எதிர்க்கட்சித் தலைவர் துன்யா மௌமூன் தெரிவித்துள்ளார்.