மாலதீவிலிருந்து சவுதி விமான மூலம் சிங்கப்பூர் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், கோட்டா பய ராஜபக்ஷ துபாய் செல்கிறார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
SV788 என்ற ‘Saudia’ சவுதி அரேபிய விமான மூலம் மாலைதீ விலிருந்து சற்று நேரத்துக்கு முன்பு புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூர் வழியாக துபாய் செல்கிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இவர் துபாயில் தங்குவதற்காக பிரத்தியேக சொகுசு பங்களா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ‘எவன் கார்ட் ‘ நிசங்க சேனாதிபதி இதற்கான ஏற்பாடுகளை செய்துள் ளார்.