ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன் மாலை தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபிய விமான மூலம் புறப்பட்ட அவர், சிங்கப்பூரில் தரையிறங்கியதும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கோட்டா பய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கி இருப்பாரா?அல்லது அங்கிருந்து துபாய் அல்லது வியன்னா போன்ற நாடுகளுக்கு செல்வாரா? என்பது தொடர்பில் போதிய தகவல்கள் இல்லை.