முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ இன்று காலை இலங்கையின் செல்வாக்கு மிக்க பெண்மணிகளில் ஒருவரான புத்திஜீவியொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்தனது கணவன் மிகவும் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக ஆரோக்கியக் குறைபாட்டை எதிர்கொள்ளும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தனது கணவன் பாதுகாப்பான இடமொன்றைச் சென்றடைந்து போதிய மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் வரை பதவியில் இருந்து விலகுமாறு அவருக்கு கொடுக்கப்படும் நிர்ப்பந்தத்தை சற்று தளர்த்த உதவி செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் அதற்கான நிலைமை நாளுக்கு நாள் கைமீறிக் கொண்டிருப்பதை குறித்த புத்திஜீவிப் பெண்மணி சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனை அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த அயோமா, பெருமூச்சுடன் தொலைபேசியை அணைத்துள்ளார்