Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகோட்டா - ரணில் பதவி விலகும் வரை ஹர்த்தாலுக்கு அழைப்பு

கோட்டா – ரணில் பதவி விலகும் வரை ஹர்த்தாலுக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரை இன்று முதல் நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறது. ஹர்த்தால், போராட்டங்கள் நடத்தப்படும் என நேற்று (13) தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் பொது மற்றும் தனியார் துறை பணியிடங்களில் இந்த கூட்டு தொழில்முறை நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் ஆதரவைப் பெறுவோம் என்று நம்புவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட ஹர்த்தால், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை விட முற்போக்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் அனுப நந்துல தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுடன் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்கள் இணைந்து கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு கூறியுள்ளதாகவும், மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க அவர்கள் தயாரில்லை என்பது தெளிவாகின்றது எனவும் சிரேஷ்ட உப ஜனாதிபதி தெரிவித்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments