Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசியல் தஞ்சம் கொடுக்குமா?: அல்லது நாடு கடத்தப்படுவாரா...?

கோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசியல் தஞ்சம் கொடுக்குமா?: அல்லது நாடு கடத்தப்படுவாரா…?

இராஜதந்திர விடுபாட்டு உரிமையை பயன்படுத்துவதற்காகவே பதவியை இராஜினாமா செய்ய கோட்டா தயக்கம்ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷ மாலை தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கு முயற்சி செய்கிறார் என்று தான் தகவல் வருகின்றன.

இந்த நெருக்கடியான நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓடிவரும் ஒரு ஜனாதிபதியை சிங்கப்பூர் ஏற்றுக் கொள்ளுமா? என்பது இராஜதந்திர வட்டாரங்களில் எழுப்பப்படுகின்ற கேள்வி. உண்மையில்,சிங்கப்பூர் மற்றவரின் சோலிகளில் கை வைக்காத ஒரு நாடு.

இலங்கைத் திருநாட்டில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவராக, துரத்தி அடிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவை, சிங்கப்பூர் ஏற்றுக் கொண்டால், சிங்கப்பூருக்கும் ஒரு அவப்பெயர் ஏற்படுவதற்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் இருக்கின்றது.

இலங்கையிலிருந்து இரவோடு இரவாக மாலை தீவுக்கு புறப்பட்டுச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தொல்லைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று போனாரோ தெரியவில்லை.

ஆனால், அங்கும் நம் நாட்டு மக்கள் அவரை விட்டு வைக்கவில்லை. தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டப் பேரணிகளை அங்கு நடத்தியதில், அச்சமடைந்த அவர், சிங்கப்பூருக்கு தப்புவதற்கு முயற்சி செய்கிறார்.

சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்கள் இவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பப் போகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

சிங்கப்பூர் அரசு கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்கினாலும், இலங்கை மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. சிங்கப்பூர் சட்ட விதிகளின்படி, நாட்டுக்குள் பிரவேசிக்கும் ஒரு சாதாரண பிரஜை, 14 நாட்கள் மட்டுமே அங்கு தங்கி இருக்க முடியும்.

இது கோட்டாவுக்கும் விதிவிலக்காக இருக்க முடியாது. கோட்டா , சிங்கப்பூருக்கு செல்வது ஜனாதிபதி என்ற வகையிலான உத்தியோபூர்வ பயணமா? அல்லது தனிப்பட்ட விஜயமா என்பது தெரியவில்லை.

ஏனென்றால், இன்னும் ஜனாதிபதி பதவியில் தொங்கிக் கொண்டிருப்பது, இப்படியான கேள்விகளை எழுப்புகின்றது. 13 ஆம் தேதி பதவி விலகுவதாக சபாநாயகரிடம் தெரிவித்த கோட்டா பய ராஜபக்ஷ , இதுவரை பதவி விலகியதாக இல்லை.

ஜனாதிபதி என்ற ராஜதந்திர தடுப்பு ( diplomatic Immunity ) உரிமையை வைத்துக்கொண்டு, இவர் நாடுகளுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் என்பதே தெரிய வருகிறது.

இவர் நினைத்தது போல் எந்த ஒரு நாடும் இவருக்கு தஞ்சம் வழங்க விரும்பவில்லை. இவர் அமெரிக்காவில் வசித்து வந்தவர். என்றாலும்,தேர்தலுக்காக தனது இரட்டை பிரஜா உரிமையை இழந்தார்.

என்றாலும் பழைய நினைப்பில் அமெரிக்கா செல்வதற்கு விசா விண்ணப்பம் செய்தார். அமெரிக்கா இவருடைய விண்ணப்பத்தை முற்றாக நிராகரித்து விட்டது.

இந்த நிலையில்,சிங்கப்பூரில், எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கும் ஆக இருந்தால், துபாய் செல்வதற்கு முயற்சிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், வியன்னாவுக்கு செல்வதற்கான திட்டமும் இவரிடம் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோட்டா இதுவரைக்கும் ஒரு உண்மையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு கோடி மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், எந்த ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம்கோரினாலும் , நிராகரிக்கப்படும் சந்தர்ப்பமே கூடுதலாக இருக்கிறது.

இதனால்தான் கோட்டா பய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதில் தயக்கம் காட்டுகிறார் அல்லது காலம் தாழ்த்துகிறார் என்பது தெட்டத் தெளிவாகிறது.

இலங்கையில் கோட்டா பய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் பேரழிச்சு உக்கிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், எந்த ஒரு நாடும் இவருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க முன் வரும் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இலங்கையின் ஜனாதிபதி என்ற பதவியோடு இவர் நாடுகளுக்கு செல்கின்ற பொழுது,ராஜதந்திர விடுபாட்டு உரிமையை அவருக்கு வழங்குகிறது. அதனாலேயே அவர் ராஜினாமா செய்வதற்கு தயக்கம் காட்டுகிறார்.

கோட்டாவுக்கு எந்த ஒரு நாடாவது நிரந்தர அரசியல் தஞ்சம் வழங்குமாக இருந்தால், அச்சமின்றி இவர் ராஜனாமாவை சமர்ப்பித்திருப்பார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர்;நாட்டை சீரழித்த பெரும் தலைவர்களில் ஒருவர்; என்று அடைமொழிகளோடு உலகம் சுற்றும் ஜனாதிபதியாக இவர் இருப்பதனால், நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக் கொள்கிறார் என்பதுதான் இன்றைய நிலைமை.

Ceylonsri – குணா.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments