கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ட்விட்டர் செய்தியில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை முன்னேறும் என நம்புவதாகவும் அவர் தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் இருந்திருந்தால், அவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்திருக்க மாட்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மாலைதீவு அரசு அந்தத் தருணத்தில் நடந்துகொண்ட விதத்தைப் பாராட்டுவதாக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மேலும் குறிப்பிட்டார்.