கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் கசிந்ததை அடுத்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியாரவாரம் செய்திருக்கின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகம் மிகவும் கவனமாக சட்டரீதியாக ஆராய்ந்து வருவதாக சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. உத்தியோக பூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும்.