பத்தரமுல்ல, பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு இராணுவ வீரர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவரது T-56 துப்பாக்கி மற்றும் 60 துப்பாக்கி ரவைகளும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராணுவ வீரர் வெல்லவாய இராணுவ முகாமில் கடமையாற்றும் ஒருவரென என பொலிஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய மோதல் காரணமாக 79 ஆண்களும், 5 பெண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.