இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டத்தாபனம் போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்துக்கு முன்னர் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் ஒளிபரப்பு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த போலீசாரம் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒளிபரப்பு முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.