Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா: மாலைதீவில் தஞ்சம்

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா: மாலைதீவில் தஞ்சம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை மூன்று மணி அளவில் இலங்கையை விட்டு விசேட ஜெட் விமானம் மூலம் மாலைதீவை சென்றடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றியதை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த கோட்டாபய நேற்று வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இதேவேளை, தானும் தனது குடும்பமும் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் வரை பதவி விலக முடியாது என கூறியதாக நேற்றைய தினம் செய்தி ஒன்று வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் ராணுவ ஜெட் விமான மூலம் மாலைதீவை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதியாக இருக்கும்வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாது. அதனால் பதவியில் இருக்கும்போதே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட விரும்பியதாக நம்பப்படுகிறது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments