“கோதா” போக வேண்டும். ரணிலும் போக வேண்டும். இவர்கள் போய் சஜித் வந்தாலும், அல்லது இந்த “கோதாபய-கோ-கம” குரூப்பே வந்தாலும், நாம் பிரச்சனை நாம் பேசா விட்டால், அவற்றுக்காக நாம் போராடாவிட்டால் அவை தீராது.
குறைந்தபட்சம் அரங்கத்துக்கே வராது. ஆகவே, தான் நான் எங்கே போனாலும், எங்கே மேடை கிடைத்தாலும், நமது மலையகத்தமிழர், ஈழத்தமிழர், முஸ்லிம்கள் என…. நம்மவர் பிரச்சினைகளை பேசுகிறேன். எல்லா மொழிகளிலும் பேசுகிறேன்.
ஏனெனில் பெரும்பான்மை அரசியல் விடயங்களை பேச தொண்ணூறு விகித நாடாளுமன்றமும், பிக்குகள், சிங்கள சமூக பிரதானிகள், ஊடகங்கள் என எத்தனையோ பேர் உள்ளார்கள். ஆகவே நாமும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் பேசும் விடயங்களை பேசி கைத்தட்டு வாங்குவதில் எந்த பயனும் எமது மக்களுக்கு, எனக்கு வாக்களித்த மக்களுக்கு இல்லை.
நாம் பிரச்சனைகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் பேச ஆளில்லை. ஆகவே, நம்ம பிரச்சனைகளை நாம் பேசினால்தான் உண்டு. இது எனக்கு வரலாறு கற்றுக்கொடுத்த பாடம்.