Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅரசியலமைப்புக்கு உட்பட்டே கோட்டா பய மாலைதீவு செல்ல விமானம் வழங்கப்பட்டது: விமானப்படை விளக்கம்

அரசியலமைப்புக்கு உட்பட்டே கோட்டா பய மாலைதீவு செல்ல விமானம் வழங்கப்பட்டது: விமானப்படை விளக்கம்

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் அரசியலமைப்புக் கிணங்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விமான வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கோட்டா பய ராஜபக்ஷ மாலதீவுக்கு சென்றுள்ளார்.

அவர் செல்வதற்கு இலங்கை விமான படையின் விமானம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக,நாட்டின் பல்வேறு தரப்பினரி டமும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இலங்கை விமான படையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

“இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த விமான உதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்திற்கு உட்பட்டு விமானப்படை விமானத்தை வழங்கி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம்,கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, சுங்கம் திணைக்களங்களின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு. , அதிமேதகு ஜனாதிபதி அவரின் பாரியார் மற்றும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவிற்கு. செல்வதற்கு விமானப்படையின் விமானம் ஒன்று 2022 ஜூலை 13 ஆம்திகதி அதிகாலை வழங்கப்பட்டது.

இவ்வாறு விமானப்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments