Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுUpdate: அதிகாரிகள் எதிர்ப்பு: வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த பசில் திருப்பி அனுப்பப்பட்டார் (காணொளி...

Update: அதிகாரிகள் எதிர்ப்பு: வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த பசில் திருப்பி அனுப்பப்பட்டார் (காணொளி இணைப்பு)

இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற விடாமல் அங்கு இருந்தவர்கள் தடுத்துள்ளனர்.

பெசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் “சில்க் ரூட்” ஊடாகவே பயணிப்பது வழக்கம் அவ்வாறு விமான நிலையத்துக்குள் வந்திருந்த வேளையில் குடி வரவு குடியகல்வு துறை சார்ந்த அதிகாரிகள் தமது பணிகளில் இருந்து வாபஸ் பெற்று பெசில் ராஜபக்சவின் கடவுச்சீட்டு பெற்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தவிர்த்து உள்ளனர்.

முறையாக விமான நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விமான நிலையத்தின் அடுத்த கட்ட த்திற்கு செல்ல முடியாத நிலை பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டது அதே நேரம் அங்கு விமானத்தில் பயணிப்பதற்காக வருகை இருந்தது பயணிகளும் அதிகாரிகளை கடமையில் ஈடுபட வேண்டாம் என கேட்டு கொண்டதோடு அவர் விமானத்திற்குள் வருகை தந்தால் விமானத்தில் வைத்து தாக்குவோம் என தெரிவித்ததை அடுத்து பெசில் ராஜபக்ஷ விமான நிலையத்தை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது.

அவரோடு ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் அவர்களது பயணம் தடுக்கப்பட்டு இருப்பதாகவும்,மீண்டும் அவர்கள் தமது மறைவிடத்திற்கு சென்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments