பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கின்றது.
இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.