கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய இருக்கும் நிலையில், அமெரிக்காவின் தஞ்சம் அடைவதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
போராட்டக்காரர்களினால் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ஜனாதிபதி மாளிகையில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, இப்பொழுது தலைமறைவாக இருக்கிறார் .
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் அமெரிக்கா செல்வதற்கும் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தார்.
என்றாலும் அமெரிக்கா இதனை புதிய பூர்வமாக நிராகரித்திருப்பதாக சென்னையில் இருந்து வழியாகும் தி ஹிந்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க இலங்கை இரட்டைப் பிரஜா உரிமை பெற்றிருந்த திரு.கோட்டா பய ராஜபக்க்ஷ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார். இந்த நிலைமையில் அமெரிக்கா செல்வதற்கு கோரிய போதும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.